கியூபா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக சிலருக்கு 25 ஆண்டுகள் உட்பட 381 பேருக்கு தண்டனை விதித்துள்ளது.
297 பேர் தேசத் துரோகம், பொதுக் குழப்பம், தாக்குதல் அல்லது கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.
கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் சுதந்திரம் வேண்டும் என கோஷமிட்டே நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், விலைவாசி உயர்வு மற்றும் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையை சுட்டிக்காட்டி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் “16 முதல் 18 வயதுடைய 16 இளைஞர்களும்” அடங்குவர் என்று அனைத்தின் அரச தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்.