எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த 13 பேர் வரையில் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் 19 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் கண்டி, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, நுவரெலியா, குருணாகல் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ இந்த விடயம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.