கட்சியில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதைத் தடுத்து சுதந்திரக் கட்சி மத்திய குழு எடுத்த தீர்மானத்திற்கான இடைக்கால தடை உத்தரவு புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று காலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மனுதாரருடன் நீதிமன்றத்திற்கு வெளியில் சமரசம் செய்து கொள்வதற்கு பேச்சு நடத்தி வருவதாக வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கை தீர்க்க முடியாவிட்டால், மாவட்ட நீதிபதியின் தடை உத்தரவை நீட்டிக்கும் முடிவை சவால் செய்வோம் என்று சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கத்தில் பதவிகளை ஏற்றுக்கொண்டு கட்சி உறுப்பினர்கள் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.
இருப்பினும் தலைவருக்கோ, பொதுச் செயலாளருக்கோ அல்லது மத்தியக் குழுவுக்கோ தம்மை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் இல்லை என தெரிவித்து நிமல் சிறிபால டி சில்வா மனுதாக்கல் செய்தார்.