போரினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 6 இலட்சம் பெறுமதியான உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வு நேற்று முல்லைத்தீவு முள்ளியவளை மற்றும் வற்றாப்பளை பகுதிகளில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசிக்கும் குமார் என்பவரது 42 ஆவது பிறந்தநாளையொட்டி பெயர் குறிப்பிட விரும்பாத நெருங்கிய உறவினால் குறித்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வணக்கம் வாழ்கதமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது போர் சூழலில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு குறித்த உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.