நாட்டின் முதல் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது.
நூரி எனப்படும் உள்நாட்டு கொரிய செயற்கைக்கோள் சியோலுக்கு தெற்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள கோஹியுங்கிலிருந்து விண்ணில் சென்றது.
இதற்கு முன்னர் 2021 அக்டோபரில் டம்மி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான தென் கொரியாவின் முந்தைய முயற்சி தோல்வியடைந்தது.
தென் கொரியாவின் விண்வெளித் திட்டம், 2030ஆம் ஆண்டுக்குள் நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.