பிரித்தானியாவில் உணவு, எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் கடந்த 40 ஆண்டுகளை விட மிக வேகமாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பணவீக்கம், விலை அதிகரிப்பு, ஏப்ரல் மாதத்தில் 9% ஆக இருந்து 12 மாதங்களில் 9.1% ஆக உயர்ந்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 1982 ஆம் ஆண்டு மார்ச் பதிவாகியமாய் போன்றே தற்போதும் பணவீக்கம் மற்றும் விலைவாசி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த ஆண்டு பணவீக்கம் 11% ஆக இருக்கும் என்று இங்கிலாந்து வங்கி எச்சரித்துள்ளது.
உணவு மற்றும் மது அல்லாத பானங்களின் விலை உயர்வு மே மாதத்தில் எரிபொருளின் பணவீக்கத்திற்கு காரணமானது என கூறப்படுகின்றது.
அறத்தொடு பாண், தானியங்கள் மற்றும் இறைச்சி ஆகியவற்றில் மிகப்பெரிய விலை அதிகரிப்பு காணப்பட்டது என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரேன் ரஷ்யா போர் காரணமாக கோதுமை மற்றும் மக்காச்சோள விநியோகம் உலகின் இரு பெரிய ஏற்றுமதியாளர்களிடமிருந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.