இந்திய அரசின் மூன்று பிரதிநிதிகள் இன்று(23) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
பிரதான பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழுவினரே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
நாட்டிற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் இந்த விஜயத்தின் போது அவர்கள் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ், 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மேலும் நிதியுதவியை இந்தியாவிடம் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இதனை உதவியாக மேற்கொள்ளாது எனவும் அவர்களுக்கும் வரையறை காணப்படுவதாகவும் குறித்த கடனை இலங்கை திருப்பி செலுத்த வேண்டியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இந்த பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதே பாதுகாப்பானது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.