பொருளாதார நெருக்கடியில் வாழும் தெரிவு செய்யப்பட்ட 33 இலட்சம் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கான நிதியை உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் வழங்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன தெரிவித்துள்ளார்.
இந்த கொடுப்பனவு 6 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.