அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் திறைசேரி திணைக்களத்தின் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்து அவர்கள் பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்தக்குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை (29) வரை இலங்கையில் தங்கியிருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொருளியலாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர்.
இந்த விஜயமானது இலங்கை மக்களின் பாதுகாப்பு மற்றும் சுபீட்சம் ஆகியன தொடர்பாக அமெரிக்கா கொண்டிருக்கும் கடப்பாட்டை வலியுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா கடந்த இருவாரங்களில் இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கென 120 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.