அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதனை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஏழு நாட்களுக்குப் பின்னர் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் வெளியிடப்பட்டு மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என தான் நம்புவதாகவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதில் உள்ள அனைத்து சரத்துக்களையும் சட்டமாக்குவதற்கு பொது வாக்கெடுப்பு தேவை அல்லது உயர் நீதிமன்ற தீர்ப்பு வேண்டும் என்றும் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.