ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இன்று (புதன்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.















