அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர பிற தீர்மானங்களை, நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை விவகாரம் பிரச்சினை ஏற்படுத்தியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வத்திற்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.