நாட்டில் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை 22 சதவீதத்தால் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் திலான் மிருண்டா தெரிவித்துள்ளார்.
அதன்படி நேற்று நள்ளிரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை முதலாம் திகதி இடம்பெறும் நிலையில், அதன் பிரகாரம் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டடுள்ளார்
அதன்படி, குறைந்தபட்ச கட்டணத்தை 32 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக உயர்த்தியுள்ளோம் என்றும் இது தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.