நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுயமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஜனாதிபதி ஒருவர் இருப்பதுபோல் கண்ணுக்கு தெரியவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “மக்கள் கடுமையான அடக்குமுறையால் அவதிப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
குறைந்தபட்சம் அந்த மக்களுக்கு நிவாரணம் இல்லை. எதிர்க்கட்சியில் இருந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை.
துரதிஷ்டவசமாக இந்த ஆட்சியில் சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கை இல்லை. நான் ரணில் விக்ரமசிங்கவின் பங்கு பற்றி பேசவில்லை. இவர் தேர்தலில் தோல்வியடைந்து தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த தனி நபர். அப்படிப்பட்டவர் பிரதமரானால் சர்வதேச அளவில் நம்பிக்கை உருவாகும் என்று நான் நினைக்கவில்லை.
தயவு செய்து இப்போதும் இதை பெரிதாக்க இடமளிக்க வேண்டாம், எமது கட்சிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடி, சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவி, நாட்டின் நம்பிக்கையையும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையையும் பெறுவதற்கான வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.