இலங்கையின் பொருளாதாரம் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர், இலங்கையின் பணவீக்கம் தற்போது 122 வீதமாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் கூட இலங்கைக்கான கடன் முறையை நிராகரித்துள்ளது என்றும் அந்த நிதியத்தால், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக 16 வேலைத்திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இலங்கை அதிகாரிகள் எவரும் அந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், உலகில் வருடமொன்றுக்கு அதிக பணவீக்கம் விகிதம் பதிவாகிய நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Sri Lanka is in a death spiral. Today, I measure LKA’s inflation at 122%/yr. Things are so bad even IMF refuses to offer Sri Lanka a bailout loan. SPOILER ALERT: Sri Lanka has had 16 IMF programs. None have worked.https://t.co/OT20JfwvzY
— Steve Hanke (@steve_hanke) July 3, 2022