அரசாங்கத்தின் பணிப்புரையின் பேரிலேயே எரிபொருளை விநியோகிக்க பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர் இலங்கை இராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக, முப்படையினரும் கடமைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸாருக்கு அசௌகரியம் ஏற்படாத சூழ்நிலைகளை ஏற்படுத்தும் வகையில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
குருநாகலில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர், உதைத்த சம்பவம் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் இராணுவம் இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் பரிந்துரைகளை வழங்க ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் முடிவுகளைத் தொடர்ந்து இராணுவ அதிகாரி தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது.