இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர ஏனைய பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை நாட்டில் போராட்டங்களையும் வன்முறையையும் தூண்டியுள்ளது.
70 வருடங்களில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் போராட்டங்கள், அமைதியின்மை மற்றும் பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே விடுமுறைக்கு செல்பவர்கள் ஆர்ப்பாட்டங்கள், வீதித் தடைகள் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றை சந்திக்க நேரிடும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
மே மாதம் இடம்பெற்ற கலவரத்தை அடுத்து பிரித்தானிய அரசாங்கம் மே 13 ஆம் திகதி முதல் ஜூன் 10 வரை இதேபோன்ற பயண பயண எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.