அமெரிக்கா, இலங்கை வந்து இங்குள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்ய வேண்டும் என வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர்களின் அரசியல் விருப்பத்திற்கு அமெரிக்கா வந்து தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் சிவில் சமூகங்கள் உட்பட போரில் பாதிக்கப்பட்டவர்களை அமெரிக்கா அழைத்து, இந்தக் மக்களுடன் கலந்தாலோசித்து வாக்கெடுப்பு நடத்துமாறும் அல்லது சிங்களவர்களுடன் பேசித் தமிழர்களுக்கு இறையாண்மையை பெற்றுத்தருமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
போஸ்னியா, கொசோவோ, கிழக்கு திமோர், தெற்கு சூடான் மற்றும் பல நாடுகளுக்கு இறையாண்மையை உருவாக்க அமெரிக்கா மட்டுமே உதவியது. சீனா, ரஷ்யா, இந்தியா தமிழர்களுக்கு உதவாது. அவர்கள் எப்பொழுதும் இலங்கையின் பக்கம்தான் இருக்கிறார்கள் எனவும் கூறினர்.