இலங்கை சோசலிச குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் இவருக்கு 134 எனும் பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்துள்ளன.
இன்று நடைபெற்ற புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இந்த வாக்கெடுப்பின்போது 223 வாக்குகள் மொத்தமாக அளிக்கப்பட்டுள்ளன.
இதில், 4 வாக்குகள் செல்லா வாக்குகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், 219 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில், சஜித் அணியின் ஆதரவைப் பெற்ற வேட்பாளரான டளஸ் அழகப்பெருமவிற்கு 82 வாக்குகள் கிடைத்துள்ளன.
மேலும், இன்னுமொரு வேட்பாளரான ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கு 3 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தேசிய பட்டியல் ஊடாக ஒரு ஆசனத்துடன் நாடாளுமன்றுக்கு வருகைத் தந்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.