காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தீர்வையே கோருவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், அடக்குமுறையால் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும் கூறினார்.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் இன்று உயர்வாகக் கடைப்பிடிக்கப்படுவதாகவும், அதைப் அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இந்த சம்பவங்களை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக நிராகரிக்க முடியாது என்றும் இது ஜனநாயகத்தை நசுக்குவதற்கான ஒரு படியாக இருக்கலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று போராட்டக்கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் நாளை தொழிற்சங்கங்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பிற குழுக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.