வவுனியாவில் சிறுபோக நெல் அறுவடைக்குரிய டீசலை கட்டம் கட்டமாக வழங்கும் செயற்பாடு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா மாவட்டத்தில் 12 ஆயிரத்து 238 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யூலை முதல் கிழமையில் இருந்து ஓகஸ்ட் கடைசிக் கிழமை வரை சிறுபோக நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
சிறு போகத்திற்குரிய டீசலை வாராந்தம் பகிர்ந்து வழங்குவதற்குரிய நடவடிக்கையை மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திரவின் வழிகாட்டலின் பேரில் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் நே.விஸ்னுதாஸனின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தற்போது வரையான காலப்பகுதியில் 6040 ஏக்கரிற்குரிய 61156.25 லீற்றர் டீசல், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 08 கமநல சேவை நிலையங்களின் ஊடாக விவசாயிகளிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மீதமாக உள்ள 6198 ஏக்கரிற்குரிய டீசலை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையினை கமந அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.