அரசாங்கத்தை கைப்பற்ற தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கு முதலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து தேர்தலை நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சில நிபந்தனைகளின் கீழ் ஆட்சியை பொறுப்பேற்க தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமும் தாம் கூறியிருந்ததாக எரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மனித உரிமைகளைப் புறக்கணித்தும், ஊடகங்களை நசுக்குவதன் மூலமும் முன்னறிச்செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
21 வது திருத்தத்தை நிறைவேற்றி போராட்டக்கார்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்தால் இந்த அரசாங்கதிற்கு ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
அரசாங்கத்தில் இணையுமாறு அழைப்புகள் தொடர்ந்தும் வருவதாகவும் எனினும் சலுகைகள் மற்றும் பதவிகள் மூலம் தம்மை கவர முடியாது என்றும் எரான் விக்கிரமரத்ன குறிப்பிட்டார்.