காலி முகத்திடலில் இருந்து போராட்ட குழுக்களை வெளியேறுமாறு பொலிஸார் விடுத்த அறிவுறுத்தலுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அனுமதியின்றி தங்கியுள்ள அனைவரை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக நாளை மாலை 5 மணிக்கு முன்னர் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே வெளியேறுமாறு பொலிஸார் விடுத்த அறிவுறுத்தலுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் யெ;யப்பட்டுள்ளன.
இதேவேளை, நுகேகொடையில் நாளை மறுதினம் பாரிய மக்கள் பேரணி ஒன்றை நடத்த காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
அடக்குமுறை, அவசரகாலச் சட்டம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு எதிராக இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கு பீடத்தை மையமாக கொண்டு ஆரம்பமாகவுள்ள இந்த பொது பேரணியில் தொழில்சார் சமூகங்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் பேரவை, சிவில் அமைப்புக்கள் மற்றும் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.