அனைத்துக் கட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய மக்கள் சக்தி நேற்று ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்றத்தின் ஊடாக அனைவரும் இணைந்து எவ்வாறு சிறந்த முறையில் செயற்பட முடியும் என்பது குறித்து இந்தபோது கலந்துரையாடியதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என தாம் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
இதேநேரம் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கவும் கோரிக்கை வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
19 ஆவது திருத்தத்தின் அவசியம் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கண்டறியவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.