இலங்கையில் இவ்வருடம் 48,777 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கூறுகிறது.
மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கண்டி, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 11,437 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், இம்மாதம் 1,916 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.