தான் இனி ஒருபோதும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தனது அரசியலின் இறுதி காலக்கட்டம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதனை ஒதுங்கியிருந்து பார்க்கப்போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.






