கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் தனிமையில் இருந்த முதியவர் ஒருவர் வீட்டின் பின் பக்கம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சடலமாக அடையாளம் காணப்பட்டவர் தம்பையா கந்தசாமி எனும் 65 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
பளை இத்தாவில் பகுதியில் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த மகள், வவுனியா சென்று திரும்பியபோதே குறித்த நபர் சடலமாக இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவானும் சடலத்தை பார்வையிட்டனர்.
பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.