நாட்டை மீட்டெடுக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட அரசியல் லாபங்களை கைவிட்டு முன்வர வேண்டும் என்று கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க கேட்டுக் கொண்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார்.
மேலும், தற்போதுள்ள சவால்களை வெற்றிகொள்ள இதுவே இயலுமாக இருக்கும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடு சிக்கலில் உள்ள இந்தத் தருணத்தில் கட்சியை பாதுப்பது குறித்தோ அல்லது வாக்கு வங்கி குறித்தோ சிந்தித்து செயற்படக் கூடாது என்றும் நாளைய தினத்தை பற்றிச் சிந்தித்து நாட்டு மக்களை சிக்கலுக்கு உள்ளாக்கினால், அரசியலுக்கு வந்தே பயனில்லாமல் போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, எமது தனிப்பட்ட விரும்புவெறுப்புகளுக்கு அப்பால் சென்று நாட்டுக்காக செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.