ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று(வியாழக்கிழமை) குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு இராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் காண்டோமினிய வளாகத்தில் இவோன் ஜோன்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு 2012 இல் ஆரம்பத்தில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் கொலைக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
அத்துடன், ரோயல் பார்க் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியிருந்தார்.