பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவினால் மட்டும் மீட்டெடுக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஒரு குருவி தனியாக வலையில் சிக்குண்டால் அதனால் எதுவும் செய்துக் கொள்ள முடியாது.
ஆனால் ஒரு குருவிக் கூட்டமே வலையில் சிக்குண்டால் அந்த வலையையும் சுமந்துக் கொண்டு அந்தக் கூட்டத்தால் பயணிக்க முடியும். இந்த நிலையில்தான் இன்று அரசாங்கம் உள்ளது.
இந்த நாட்டை முன்னேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டும் தனியாக முடியாது.
சஜித் பிரேமதாஸவுக்கு ஒருபோதும் நாட்டை மீட்க முடியாது.
நான் இந்நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க வரவேண்டும் என்ற கருத்துடன் நீண்ட காலமாக இருந்தவன்.
ரணில் விக்கிரமசிங்கவை அன்று எதிர்த்த தரப்பினர் கூட, இன்று அமைச்சுப் பதவிகளுக்காக அவரின் முன்பாக மண்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.- என்றார்.