குறைந்த எண்ணிக்கையிலான பிசிஆர் மற்றும் துரித என்டிஜன் பரிசோதனை கருவிகள் காரணமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட முறையின் கீழ் மக்களிடையே கொவிட் -19 வைரஸ் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் சூழ்நிலைகளுக்கு மாத்திரம் பிசிஆர் மற்றும் RAT பரிசோதனைகளை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஒரு நாளில் கிட்டத்தட்ட 25,000 பிசிஆர் சோதனைகளை நடத்திய காலம் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நாடு அத்தகைய சோதனை கருவிகளை கொள்வனவு செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.