கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்றுவரை உரிய மறையில் பேருந்து நிலையம் முழுமையாக அமைத்து கொடுக்கப்படாத நிலையில் நெல் உலர்த்தும் இடமாக பேருந்து நிலையம் மாறி வருகின்றது.
தற்பொழுது குறித்த பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், நெல்லை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தும் பகுதியாக பயன்படுத்தப்படுகின்றது.
2010ம் ஆண்டுக்கு பின்னர் வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் புதிதாக பேருந்து நிலையம் அமைத்த கொடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் பேருந்து நிலையமானது சுமார் 5 ஆண்டுகளிற்கு மேலாக அபிவிரு்ததி செய்யப்பட்டு வருகின்ற போதிலும், அது முழுமை பெறாத காரணத்தினால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பல மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகள், முழுமையாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட வேண்டும் இல்லையேல் இவ்வாறு மாற்று பயன்பாட்டுக்காக இவை பயன்படுத்தப்படும் நிலையே உருவாகும்.
இந்த வருடத்தின் இறுதி மாதங்களில் பருவ மழை பெய்ய ஆரம்பிக்கும். அவ்வாறான நிலையில் மக்கள் போக்குவரத்தினை சிரமமின்றி பெற்றுக்கொள்வதற்கு ஏற்ப குறித்த பேருந்த நிலையத்தை முழுமையாக்கி மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்க வேண்டும்.