நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பில் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் மீதான விசாரணைகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடக்கோரி சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட 9 பேரினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அந்த மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.