அத்தியாவசியமற்ற 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவது சிறந்த முடிவு என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
நாடு எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த கட்டுப்பாடு அத்தியாவசியமான நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வரையறுக்கப்பட்ட அந்நிய செலாவணியையே நாம் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பாக எரிபொருள், மருந்து, எரிவாயுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களுக்கு பணத்தை பயன்படுத்தப்பட்டால், இது போன்ற சூழ்நிலையில் மக்களுக்கு பெரும் வசதியாக இருக்கும் என ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு கிடைத்தவுடன், கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக நீக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.