ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் முதல் வெற்றிடத்திற்கு ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்படவுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாட்டின் ஊழல் தடுப்பு வேலைத்திட்டத்தின் தலைவராக செயற்படுவதற்கு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க நேற்று பொதுமணிபோப்பில் விடுதலை செய்யப்பட்டார்.
இதனை அடுத்து ரஞ்சன் ராமநாயக்கவுடன் இணைந்து ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊழலுக்கும் மோசடிக்கும் எதிராகப் போராடிய மக்கள் தலைவரான ரஞ்சன் ராமநாயக்கவுக்குக் கிடைத்த சுதந்திரம் குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் முழுநேர அரசியலில் ஈடுபட அவருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.