பணவீக்க அதிகரிப்பு காரணமாக இலங்கையில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் முன்னெடுத்த ஆய்வின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வு செலவு 63 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் தற்போது குறித்த தொகை 47 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைகழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.