சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் ஒரு மாதமாக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் அதிருப்தியடைந்த குடியிருப்பாளர்கள் போராட்டத்தில் ஈபட்டனர்.
இணையதள காணொளி ஒன்றில் ஆர்ப்பாட்டத்திற்காக இருளில் ஏராளமானோர் கூடியிருந்தமை காண்பிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில்,பொலிஸாரும் அதிகாரிகளும் காணப்படுகின்றனர்.
போராட்டக்காரர்களில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, ‘வேலைக்குத் திரும்பு! என ஒருமித்த குரலில் கூச்சலிட்டுள்ளனர். அரச அதிகாரிகள் 30 நாட்களாக எங்களை புறக்கணித்துள்ளனர். சாமானியர்களான நாங்கள் மூழ்குகிறோமா அல்லது நீந்துகிறோமா என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, பெய்ஹாய் நகராட்சி நிர்வாகம் அவசரமான கூட்டமொன்றை நடத்தியிருந்தது. வியட்நாமின் எல்லையில் இருந்து 50 மைல்கள் தொலைவில் உள்ள 1.5 மில்லியன் நகரமான பெய்ஹாய் நகராட்சிந நிருவாகம், ‘வேலைக்குத் திரும்பு! வேலைக்குத் திரும்பு!’ என கோஷம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்களிடத்தில் மறுதினமே தடைகள் நீக்கப்படுவதாக அறிவித்தது.
மீனவர்கள் உடனடியாக தங்கள் தொழிலைத் தொடங்க அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், அனைத்து அரசு நிறுவனங்கள், நிறுவனங்கள் ஆகியன இயல்பான உற்பத்தி மற்றும் அலுவலக நேரத்தை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
குறித்த நகராட்சியானது, அதன் உள்ளூர் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை கடல்சார் நடவடிக்கைகளில் தங்கியுள்ளது. அத்துடன், அண்மையில் தென்சீனக் கடலில் தடைகள் நீக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியையும் வாழ்வாதாரத்திற்கான பயன்படுத்துகின்றது.
இந்நிலையில், ‘மக்களின் கோபத்தை அடக்க முடியாத ஒரு நாள் வரும்; அந்த உணர்வு வெடிக்கும் போது, சீன அரசாங்கத்தால் அதை அடக்க முடியுமா?’ என வலைப்பதிவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன், மக்கள் எழுச்சி பெறுவதற்கு முன்பு எவ்வளவு அடக்குமுறைகளை பயன்படுத்த முடியும் என்பதைப் அரசாங்கம் சோதிக்கிறதா?’ எனவும் கேள்விகளைத் தொடுத்துள்ளனர்.
இதேவேளை, ஜூலை முதல், பெய்ஹாய் நகரம் கிட்டத்தட்ட 2,000 புதிய கொரோனா நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது.
ஜூலை 25 அன்று, அதிகாரிகள் குடியிருப்பாளர்களின் நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தினர்.
அத்துடன், 314 அதிக ஆபத்துள்ள பகுதிகள் மற்றும் 37 நடுத்தர ஆபத்து பகுதிகளாக அறிவித்தனர்.