குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிக்கு 11 மில்லியன் டொலர் நிதி வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
டென்மார்க்கைச் சேர்ந்த பவேரியன் நோர்டிக் நிறுவனத்தின் ஜைன்னியோஸ் என்ற தடுப்பூசியை தயாரிக்க நிதி வழங்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக அந்த நிறுவனத்திடம் இருந்து 30 லட்சம் டோஸ்களை முன்பதிவு செய்த அமெரிக்கா, ஜூலையில் கூடுதலாக 25 லட்சம் டோஸ்களை கோரியுள்ளது.
உலகளவில் குரங்கம்மை பாதித்தோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 600-ஐ கடந்துள்ள நிலையில், அமெரிக்காவில் மட்டும் அந்நோய் பாதிப்பு சுமார் 17 ஆயிரம் பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.