நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தருணத்தில் அமைச்சரவையை அதிகரிக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண இதனை தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை தீர்மானிக்க தெரிவுக்குழுவொன்றை அமைக்க தமது கட்சியின் நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
நெருக்கடிக்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிவது அவசியமாகும் என்றும் அது அரசியல் தலைமையாக இருக்கலாம், அல்லது அப்போதைய நிதி அமைச்சராக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாராக இருப்பினும் நாட்டைநெருக்கடிக்குள் தள்ளியவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்தத் தருணத்தில் அமைச்சரவையை அதிகரிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.