• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/16
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது எவ்விதத் தயக்கமுமின்றி அவற்றை ஏற்றுப் பணிகளைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

அத்துடன், 2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக முறையாகப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஹம்பாந்தோட்டை, தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுத் நிகழ்ச்சியில் நேற்று (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

2027ஆம் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவுள்ளோம். தற்போது 6ஆம் தரத்தில் உள்ள மாணவர்களை இப்புதிய பாடத்திட்டத்திற்குள் உள்வாங்குவது குறித்து ஆராய ஒரு குழுவினை நியமித்துள்ளோம். அக்குழுவின் அறிக்கையின்படி எதிர்கால நடவடிக்கைகள் அமையும்.

வகுப்பறைகளின் அடிப்படை வசதிகள், வகுப்பறைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் கல்விச் சீர்திருத்தம் தொடர்பான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். ஆரம்பப் பிரிவு வகுப்பறையில் 25-30 மாணவர்களும், இரண்டாம் நிலைப்பிரிவில் 35 மாணவர்கள் வரையும் உள்வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். எக்காரணம் கொண்டும் சுற்றறிக்கைகளுக்குப் புறம்பாக மாணவர்களைப் பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளக் கூடாது.

வகுப்பறைகளை அபிவிருத்தி செய்யும்போது, அவை நடைமுறைச் செயற்பாடுகளுக்கு உகந்த வகையில் அமைவதை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களைப் பொறியியல் பிரிவினர் தற்போது தயாரித்து வருகின்றனர். பாடசாலைகளில் நிலவும் சில பிரச்சினைகளை மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகள் மட்டத்திலேயே தீர்த்துக்கொள்ளக் கூடியவையாகும். சுகாதார வசதிகளை மேம்படுத்துவது முதல் அனைத்துப் புனரமைப்புப் பணிகளையும் தரமான முறையில் முன்னெடுக்குமாறு நாம் ஆலோசனை வழங்கியிருக்கின்றோம். 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளின் அபிவிருத்திக்கான நிதியினை ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளோம். எனவே, கட்டமைப்புக் குழுக்களின் ஊடாக முறையான திட்டங்களைத் தயாரித்து, மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியுடன் அவற்றைச் சமர்ப்பியுங்கள். ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள்.

2026ஆம் ஆண்டில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் Smart Board மற்றும் இணைய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பெற்றோரிடமிருந்து நிதி வசூலிக்க வேண்டாம். ஒவ்வொரு பாடசாலைக்கும் அனுமதிக்கப்பட்ட வருடாந்த நிதி ஒதுக்கீடு இருக்கின்றது. அதற்கு மேலதிகமாகப் பெற்றோர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளாதீர்கள். குறிப்பாகப் பாடசாலை வைபவங்களின் சுமையைப் பெற்றோர் மீது சுமத்தாத விதத்தில் அவற்றை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.

பல வருடங்களாக ஆசிரியர், அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் விளைவாகப் பெருமளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. விசாரணையில் இருந்த வழக்குகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது நாம் 23,000 ஆசிரியர்களை முறையாகச் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கான போட்டிப் பரீட்சைகள் ஏப்ரல் இறுதி அல்லது மே ஆரம்பத்தில் நடைபெறவுள்ளன.

அதிபர் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நாம் அறிவித்தல் விடுத்திருந்த போதிலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே விண்ணப்பித்துள்ளார்கள். சம்பளப் பிரச்சினை ஒன்று இருப்பதை நாம் அறிவோம். அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராயச் சம்பளக் குழுவிற்குப் பரிந்துரைகளை முன்வைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். எனினும், பதவி நியமனம் வேண்டிப் போராட்டம் நடத்துபவர்கள், நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது அவற்றைப் பொறுப்பேற்கத் தயங்குகிறார்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கக்கூடும் என்பதை நாம் அறிவோம்; ஆயினும் பதவியை ஏற்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தாம் விரும்பிய இடங்களுக்குச் செல்ல முடியும் என்ற ஒரு கருத்து நிலவி வருகின்றது. இதனால் ஒட்டுமொத்தக் கல்வித்துறையிலும் பாரிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

சிலர் அதிபர் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்காது, ஒரே பாடசாலையில் பிரதி அதிபர்களாகவே தொடர்ந்தும் கடமையாற்றும் நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆயினும் அதற்கு இடமளிக்க இயலாது. இது ஒரு கௌரவமான சேவையாகும். ஆகையினால், அதிபர் சேவையின் தொழில்சார் கௌரவத்தை உறுதிப்படுத்துவதற்கான விசேட அறிக்கை பாராளுமன்றக் கல்விச் சபையூடாகத் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கத் தயார்படுத்தப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும்போது, அந்தந்தப் பிரிவுகளில் நிலவும் நிலைமைகளை எதிர்வு கூறி, கட்டமைப்புக் குழுக்கள் ஊடாக அத்திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு நாம் முன்மொழிந்துள்ளோம்.

அத்துடன், மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கைகள் அல்லது தீர்மானங்கள் அறிவிக்கப்படும் வரை காத்திராது, கோட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் துரித தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனப் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, அதுல வெலந்தகொட மற்றும் மாகாண, வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

blank

blank

Related

Tags: Harini Amarasuriyaஹரிணி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை

Next Post

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

Related Posts

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
இந்தியா

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!
இலங்கை

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

2026-05-27
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!
இலங்கை

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026-05-27
2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!
இலங்கை

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

2026-05-27
அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!
இலங்கை

அனுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்வு; யாழில் போராட்டம்!

2026-05-27
போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! 
இலங்கை

போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! 

2026-05-27
Next Post
யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் - ட்ரம்ப் எச்சரிக்கை!

கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

கல்முனைக்குடி - 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

0
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

0
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

0
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

0
2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

0
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

2026-05-27
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

2026-05-27
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026-05-27
2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

2026-05-27

Recent News

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

2026-05-27
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

2026-05-27
கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026-05-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.