துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர பொதுதேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து விடுதலை செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேறிருந்தார்.
2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது நபரொருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுங்காக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை விடுவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.