ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு சற்றுமுன்னர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகியது.
அமர்வின் ஆரம்பமாக மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான விரிவான அறிக்கையும் இன்றைய அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று தொடங்கும் அமர்வு, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.