மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கும் சாத்தியம் உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரிடம், மேலும் பல அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவதன் உண்மை தன்மை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அமைச்சர், தற்சமயம் மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் மேலும் அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தாம் நம்புவதாகவும் இதன் மூலம் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக உயரும் என்றும் அமைச்சர் கூறினார்.
தற்போதைய அமைச்சர்களுக்கு பல அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சர்கள் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அமைச்சர்களை நியமிப்பதன் மூலம் சில அமைச்சுக்களை அவர்களுக்கு வழங்க முடியும் என்றும் இது தற்போதைய அமைச்சர்களின் சுமையை குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.