இலங்கையில் சுற்றுலா மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் நேபாளத்துடன் இருதரப்பு உடன்படிக்கையை எட்டுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள தூதுவர் பாசு தேவ் மிஸ்ராவுக்கும் இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரு நாட்டு இளைஞர்கள் பல்கலைக்கழக கல்வி மற்றும் சுற்றுலா வாய்ப்புகளுக்காக இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி, இளைஞர் பரிமாற்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த இதன்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அந்த நோக்கத்திற்காக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கும் நேபாள அரசாங்கத்திற்கும் இடையில் மேலதிக பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.