ரஷ்யாவும் உக்ரைனும் ஏறக்குறைய 300 பேரை உள்ளடக்கிய கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளன.
ஏழு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ரஷ்யாவின் படையெடுப்பின் இது மிகப்பெரிய கைது பரிமாற்றம் ஆகும்.
விடுவிக்கப்பட்டவர்களில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த போர்க் கைதிகளும் அடங்குவர். அவர்களில் சிலர் உக்ரைனில் பிடிபட்ட பின்னர் கூலிப்படையினர் என்று குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலின் உக்ரைனிய பாதுகாப்புக்கு நீண்ட காலம் தலைமை தாங்கிய ஐந்து தளபதிகள் உட்பட சுமார் 215 உக்ரைனியர்களை ரஷ்யா விடுவித்தது.
மாற்றமாக, உக்ரைன் 55 ரஷ்யர்களையும் மாஸ்கோ சார்பு உக்ரேனியர்களையும், தேசத்துரோக குற்றச்சாட்டை எதிர்கொண்ட தடை செய்யப்பட்ட ரஷ்ய சார்பு கட்சியின் தலைவரான விக்டர் மெட்வெட்சுக்கையும் திருப்பி அனுப்பியது.
சவூதி அரேபியா மற்றும் துருக்கியின் உதவியுடன் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு வெற்றியைக் கண்டுள்ளது.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் மத்தியஸ்தத்தை தொடர்ந்து சவூதி அரேபியா 10 வெளிநாட்டினரை விடுவிப்பதாக அறிவித்தது. இந்த குழுவில் ஐந்து பிரித்தானிய பிரஜைகள், இரண்டு அமெரிக்கர்கள், ஒரு குரோஷியன், ஒரு மொராக்கோ மற்றும் ஒரு ஸ்வீடிஷ் குடிமகன் அடங்குவர் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறியது.