மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் சுமார் 2,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
பேக்கரி தொழிலுக்கு தேவையான பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கூறினார்.
இதன் காரணமாக இத்தொழிலை நம்பியுள்ள சுமார் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.