பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் தரம் தொடர்பில் பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பரிசோதனைக்கான மாதிரிகள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக பொதுப் பயன்பாடுகள்
ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
எரிபொருளின் தரம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.














