கடந்த ஜூன் 9ஆம் திகதி போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது.
குறித்த அறிக்கை உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகை கட்டடம் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொல்பொருள் சின்னங்கள் மற்றும் ஓவியங்கள் சேதமடைந்துள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்களினால் சேதப்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸாரிடம் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.