எரிபொருட்களின் விநியோகத்தை அதிகரிக்கும் பட்சத்தில் முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் இதனைத் தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முச்சக்கர வண்டிகளுக்கு மேலும் பத்து லீற்றர் அல்லது அதற்கு மேலதிகமாக எரிபொருளை அனுமதித்தால் முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைக்க வசதியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது எரிபொருள் ஒதுக்கீட்டை மேலும் 10 லீற்றர் அதிகரிப்பதற்கு ஜனாதிபதியின் ஆலோசகர் தீர்மானித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.