ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று(புதன்கிழமை) மாலை நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியின் தலைமை அமைப்பாளர் அலுவலகத்தில் இதுதொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற நிலையியற் கட்டளைத் திருத்த விவாதத்தின் போது, கோப் மற்றும் கோபா குழுவின் தலைவர்கள் பதவிகள் தமக்கே வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் திருத்தங்களைச் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளதாக ஆளும் தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் வாக்கெடுப்புகள் நடத்தப்படுமாயின் ஆளும் தரப்பின் பலத்தை நிரூபிக்கும் பொருட்டே ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.